அண்மைய செய்திகள்

recent
-

கணனி மயப்படுத்தப்பட்ட மன்னார் நகரசபையின் வருமான வரி செலுத்தும் பிரிவு திறந்து வைப்பு-படங்கள்


மன்னார் நகரசபையின் வருமான வரி செலுத்தும் பிரிவு இன்று முதல் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று  வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானபிரகாசம் தலைமையில் மன்னார் நகரசபையில் நடைபெற்றது.
இன்று காலை 11 மணியளவில் குறித்த கணனிமயப்படுத்தப்பட்ட வரி செலுத்தும் பகுதியினை பிரதம அதிதியாக கலந்து கொண்ட வட மாகாண உள்ளுராட்சிகள் அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் வைபவரீதியாக திறந்து வைத்ததுடன் முற்றிலும் கணனிமயப்படுத்தப்பட்ட வருமான வரி செலுத்தும் பகுதியின் சேவையினையும் ஆரம்பித்துவைத்தார்.
இதேவேளை நகரசபையின் சேவைகள் தொடர்பில் முறைப்பாடுகள் மற்றும் மக்களின் கருத்துக்களை தெரிவிக்க விசேட முகமாக கணனி மயப்படுத்தப்பட்ட முறை ஒன்றும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இதன் மூலம் மன்னார் நகர சபைக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகள் மற்றும் நகர சபையின் செயற்பாடுகளினால்  மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக பாதக விடயங்ளை தெரிந்து கொண்டு அதற்கு எடுக்கப்படவேண்டிய மாற்று நடவடிக்கைகள்  தொடர்பில் நகரசபை ஆராய்ந்து குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகான இம் முறை செயற்படுத்தபடவுள்ளது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கோபால குமார் தம்பி, உள்ளுராட்சி திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஏ.சுபாகரன், வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் யேகூ, மன்னார் மாவட்ட உள்ளுராட்;சி பிரதி ஆணையாளர் எம்.ஏ.ஜே.துரம் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின் மன்னார் நகர சபையின் உறுப்பினர் ஊழியர்கள் மற்றும் வரி செலுத்துனர்களுடனான சந்திப்பொன்று நகர மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் நகரசபை முதல்வர் ஞானபிரகாசம் , நகரசபை உப தலைவர் ஜேசுதாசன் ஜேம்ஸ், நகரசபை செயலாளர் பிறிட்டோ,  நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ், சமூக ஆர்வலர் சாள்ஸ் நிமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 குறித்த சந்திப்பின்; அதிதிகள் உரை இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது










கணனி மயப்படுத்தப்பட்ட மன்னார் நகரசபையின் வருமான வரி செலுத்தும் பிரிவு திறந்து வைப்பு-படங்கள் Reviewed by Author on February 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.