அண்மைய செய்திகள்

recent
-

உலகின் நீளமான விமானத்தை இங்கிலாந்து அறிமுகம் செய்துள்ளது

300 அடி நீளமுடைய உலகின் மிக நீளமான விமானத்தை இங்கிலாந்து அறிமுகம் செய்துள்ளது.

தற்கால நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747  ஆகியவற்றை விடவும்  இந்த புதிய விமானம் 60 அடி அதிக நீளம் கொண்டதாக அமைந்துள்ளது.

50 டன் சரக்குபொருட்கள்  மற்றும் 50 பயணிகளுடன் இந்த விமானம் பயணிக்க கூடியது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்’ளன.

வானில் மட்டுமன்றி   நீரிலும் ஊர்ந்து செல்லும் ஆற்றலுடன் சுமார் 60 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் செலவில் இந்த விமானம் அமெரிக்க விமானப்படைக்கு என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த ஓசையுடனும், எரிபொருள் சிக்கனத்துடனும் இயங்கக் கூடிய இந்த விமானம், நிரப்பப்பட்ட எரிபொருளுடன் சுமார் 3வார காலம் தரையிறங்காமல் ஆகாயத்திலும், நீரிலும் பயணிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.


உலகின் நீளமான விமானத்தை இங்கிலாந்து அறிமுகம் செய்துள்ளது Reviewed by NEWMANNAR on March 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.