காணாமற்போனதாக கூறப்படும் மலேஷிய விமானம் குறித்த மர்மம் நீடிப்பு
காணாமல் போனதாக கூறப்படும் மலேஷியப் பயணிகள் விமானம் குறித்த மர்மம் தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் அதிகாரிகள் நிராகரிக்கவில்லை என மலேஷிய சிவில் விமானப் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட
அதிகாரி அசாரூதீன் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.
குறித்த விமானத்தினது என சந்தேகிக்கப்படும் பாகங்கள் வியட்நாம் கடற்பரப்பில் கண்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தகவல்களை உறுதிப்படுத்தமுடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விமானத்தை கண்டறிவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அசாரூதீன் அப்துல் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்..
காணாமல் போயுள்ள விமானத்தை தேடும் பணிகளில் 9 நாடுகளைச் சேர்ந்த 40கப்பல்களும், 34 விமானங்களும் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
காணாமற்போனதாக கூறப்படும் மலேஷிய விமானம் குறித்த மர்மம் நீடிப்பு
Reviewed by NEWMANNAR
on
March 10, 2014
Rating:

No comments:
Post a Comment