சிவனொளிபாத மலைக்குச் செல்லும் வயது வந்தவர்களிடம் பத்து அமெரிக்க டொலர் அறவிட ஏற்பாடு.
நாடு முழுவதிலுமுள்ள தேசிய வனவிலங்கு பூங்காக்களை பார்வையிட செல்லும் உள்நாட்டுமற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணங்களை அறவிடும் முறையை அறிமுகப்படுத்த வனஜீவராசிகள் வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது .
இதனடிப்படையில் புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்கவும் , வரி , வாகன கட்டணம் மற்றும் சேவை கட்டணங்களை உள்ளடக்கி உரிய தொகை ஒன்றை கட்டணமாக நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .
புதிய கட்டணங்களின் அடிப்படையில் யால தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்குள் பிரவேசிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பத்து பேரை கொண்ட குழுவினருக்கு 3 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்பட உள்ளது .
பத்துக்கு மேற்படும் ஒரு நபருக்கு தலா 300 ரூபா கட்டணமாக அறிவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .
அதேவேளை சிவனொளி பாத மலைக்கு செல்லும் வயது வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தலா 10 அமெரிக்க டொலர்கள் அறவிப்பட உள்ளதோடு , சிறுவர்களுக்கு 5 டொலர்கள் அறவிடப்பட உள்ளன .
இதனை தவிர சுற்றுலா விடுதிகளை முன்பதிவு செய்யும் கட்டணம் மற்றும் படகு சவாரி கட்டணம் என்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளன .
சிவனொளிபாத மலைக்குச் செல்லும் வயது வந்தவர்களிடம் பத்து அமெரிக்க டொலர் அறவிட ஏற்பாடு.
Reviewed by NEWMANNAR
on
March 01, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 01, 2014
Rating:


No comments:
Post a Comment