அண்மைய செய்திகள்

recent
-

விபூஷிகாவின் மனதை உருக்கும் கடிதம்.

நான் பா.விபூஷிகா. தாழ்மையுடன் வேண்டுகோள் விடுப்பது யாதெனில் எனது அம்மாவையும்விடுதலை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்................என்கின்ற விபூசிகாவின் உருக்கமான வரிகள் அனைவருடைய மனங்களையும் உறைய வைத்துள்ளது.
தடுப்பிலுள்ள பாலசிங்கம் ஜெயக்குமாரியின் மகளான விபூசிகாவின் கடித்தின் முழுமையான வரிகள்...............


நான் பா.விபூஷிகா. தாழ்மையுடன் வேண்டுகோள் விடுப்பது யாதெனில் எனது அம்மாவையும் விடுதலை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என்னையும் எனது அம்மாவையும் கடந்த 13.03.2014 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் பொய்க்குற்றம் சுமத்தி அதிக இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் எம்மைப் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் போல எம்மை நடத்தி, எம்மைப் பயமுறுத்தி எனது அம்மாவைக் கால்களால் அடித்தும் தலைமயிரைப் பிடித்து இழுத்தும் கன்னங்களில் அறைந்தும் எம்மை பொய்யான தகவல்கள் எழுதப்பட்ட கடிதத்தில் என்னிடம் இருந்தும் எனது அம்மாவிடம் இருந்தும் கையொப்பம் பெறப்பட்டன.

ஆனால் நானோ எனது அம்மாவோ எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை.

எனது அம்மா ஒரு அப்பாவி. எனது 3 ஆண் சகோதரகளும், ஏற்கனவே பிரிந்த நிலையில் தற்பொழுது எனது பூப்புனித நீராட்டு விழாக் காலப்பகுதியில் எனது அம்மாவையும் கைது செய்துள்ளபடியால், நான் எந்த உதவியுமின்றி எனது அம்மா இருந்தும் அனாதையாகவே இருக்கின்றேன்.

ஆகவே எந்த வழியிலாவது எனது அம்மாவின் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க்குற்றச்சாட்டை மீளப்பெற்று, எனது அம்மாவை என்னுடன் மிக விரைவில் சேர்ந்து வாழ உதவுமாறு மிகவும் மன்றாட்டமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு உண்மையுள்ள, 
பா.விபூஷிகா

விபூஷிகாவின் மனதை உருக்கும் கடிதம். Reviewed by NEWMANNAR on March 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.