அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் நகைக்கடைகளில் நகைகளை கொள்ளையிட்டு வந்த பெண் கைது

 வவுனியாவில் நகைக்கடைகளில் நகை வாங்குவது  போன்று நாடகமாடி நகைகளை கொள்ளையிட்ட  பெண்ணொருவர் நேற்று  வவுனியா  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

இளம்பெண்ணொருவர் வவுனியாவில் பல  நாட்களாக நகை கடைகளுக்கு சென்று நகைகளை  வாங்குவது போன்று நாடகமாடி  அங்குள்ளவர்களை ஏமாற்றி லாவகமாக  நகைகளை கொள்ளையடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நகை கடைகளில் உள்ள சிசிரிவி  கமராக்களில் இப்பெண் நகைகளை திருடுவது  பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அனைத்து  நகைக்கடைகளிலும் இப்பெண் தொடர்பான தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று  முன்தினம் நகர்ப்பகுதியில் உள்ள  நகைக்கடையொன்றுக்கு இப்பெண் வந்த சமயம்  பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரினால் இப்பெண் கைது  செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை கைது செய்யப்பட்ட பெண்ணை  நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு   பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு  வருகின்றனர்
வவுனியாவில் நகைக்கடைகளில் நகைகளை கொள்ளையிட்டு வந்த பெண் கைது Reviewed by NEWMANNAR on March 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.