முச்சக்கர வண்டி திருட்டு; 18 வயதான இளைஞன் கைது
இறக்குவானை – காலவத்த பொத்துபிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்று திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் வீடொன்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று நேற்று இரவு 10 மணியளவில் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய திருடப்பட்ட முச்சக்கர வண்டியுடன் பயணித்த வேளை கடமையில் இருந்த பொலிஸார் வண்டியை கைப்பற்றியுள்ளதுடன் , சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் முன்னெடுப்பதுடன் , சந்தேகநபரை இன்று நிதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முச்சக்கர வண்டி திருட்டு; 18 வயதான இளைஞன் கைது
Reviewed by NEWMANNAR
on
March 24, 2014
Rating:

No comments:
Post a Comment