மன்னார் மேத்தன்வெளி குளக்கட்டு வீதியின் அவலநிலை
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்டபட்ட மேத்தன்வெளி கிராம சேவகர் பிரிவில் சிலாவத்ததுறை பிரதான வீதியில் இருந்து மேத்தன்வெளி கிராம குளக்கட்டு வீதியின் ஊடாக நானாட்டன் செல்லும் வீதி பல வருடகாலாமாக செப்பனிடபடாமல் காணப்படுகிறன்தை படத்தின் முலம் காணலாம்
இப்பாதையின் ஊடாகதான் அதிகமான ஆசிரியர்கள் முசலி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் வியாபாரிகள் மற்றும் ஏழு ஊரினை மையமாக கொண்ட பண்டாரவெளி பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பயன்படுத்தும் வீதியுமாக காணப்படுகின்றது.
அத்துடன் தற்போது முசலி பிரதேசத்தில் கட்டி முடித்த ஆரம்ப வைத்தியசாலையும் அவ் வீதியில் அமைய பெற்றுள்ளது.இன்னும் சில மாதங்களில் திறந்து வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மழை காலங்களில் பாடசாலை மாணவர்கள் .கற்பிணி தாய்மார்கள் முதியோர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பல அசௌகரியங்களை ஏதிர் நோக்குகின்றார்கள் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் தெரிவிக்கையில் இப்பிரச்சினை தொடர்பாக பல அதிகாரிகளுக்கும் ஊடகங்கள் வாய்லாகவும் தெரிவிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
உரிய அதிகாரிகள் மக்களின் நலன் விடயத்தில கரிசனை காட்டுமாறும் அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கினறனர்.
எஸ்.எச்.எம்.வாஜித்
மன்னார் மேத்தன்வெளி குளக்கட்டு வீதியின் அவலநிலை
Reviewed by NEWMANNAR
on
March 05, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment