அரசாங்கம் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை நிராகரிப்பு
.jpg)
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் இலங்கையின் சார்பாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இராணுவத்தினர் ஒருபோதும் சிவில் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் எந்தவிதமான தங்கு தடையின்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. இதற்கு நல்லதொரு உதாரணம் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்ட வடமாகாண சபை தேர்தலாகும்.
வடமாகாண சபையின் தேர்தலை நடத்தி காட்டிய வடமாகாண சபையை நிறுவியமையானது இந்த நடைமுறையின் உச்ச தன்மையை எடுத்தியம்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் ஆளுநர் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களின் நியமனங்கள் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்திற்கு உட்பட்டவை இருந்த போதிலும் இந்த நியமனங்கள் தொடர்பில் வெளிநாடுகளின் தலையீடு வருந்ததக்கதாகும்.
வடமாகாணத்தில் 2009 ஆம் ஆண்டு இருந்ததனை விடவும் படையினர் குறைவாகவே இருக்கின்றனர். அங்கு 30 வீத படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 26 வீத படைக்குறைப்பு இடம்பெற்றுள்ளரு என்றும் அவர் தெரிவித்தார். படையினரால் பாலியல் துஷ்பிரயோகங்கள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகளை அடியோடு மறுப்பதுடன் அவ்வாறான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தால் மிக கடுமையான அதிகாரத்தினை நாங்கள் பிரயோகத்திருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் விதத்தில் முன் வைக்கப்படும் பிரேரணையையும், இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையையும் நாம் நிராகரிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மிகக் கொடூரமான யுத்தம் இலங்கையில் முடிவடைந்துள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தேசியத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
வடக்கில் இனப்பாகுபாடு காட்ட அரசாங்கம் முயலவில்லை. யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் 75 ஆயிரம் முஸ்லிம்களும் 35 ஆயிரம் சிங்களவர்களும் அங்கு வாழ்ந்தனர். எனினும் தற்போது சிங்களவர்கள் அல்லாதோர் 35 வீதத்தினர் கொழும்பில் வசிக்கின்றனர். இந்த நிலையில் இலங்கையில் ஓர் இனத்திற்கென்று பிரத்தியோகமாக ஒரு பிரதேசத்தை ஒதுக்கமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மத ஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அரசு அத்தகைய வன்முறை நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ளமாட்டாது. காணாமற்போனோர் பற்றியும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் வழங்குவது குறித்தும் ஆணைக்குழு விசாரணைகளின் பின்னர் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஒருசில நாடுகளின் சார்பில் வெளிநாடுகள் சில இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன என்று தெரிவித்த அவர் மனித உரிமை விவகாரமானது பொதுவானதாக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கம் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை நிராகரிப்பு
Reviewed by Author
on
March 06, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment