காணாமல்போன விமானம்; போலி கடவுச்சீட்டில் பயணித்தவர்களின் திட்டம் என்ன?- தொடரும் மர்மங்கள்
நடுவானில் மாயமான மலேசிய விமானத்தில், போலி கடவுச்சீட்டில் பயணம் செய்த 2 பேர் தீவிரவாதிகளாக இருக்கக்கூடுமென சந்தேகம் வெளியாகியது.
இதைத் தொடர்ந்து மலேசிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒருவரின் அடையாளம் தெரியவந்தது.
ஈரான் நாட்டைச் சேர்ந்த பவுரியா நூர் முஹமது மெஹர்தாத் (வயது 19) என்பவர் போலி கடவுச்சீட்டில் பயணம் செய்துள்ளதாகவும், அவருக்கும் தீவிரவாத இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் குடியேறும் நோக்குடன் அவர் சட்டவிரோதமாக போலி கடவுச்சீட்டில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் ஜேர்மன் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததாக அவரது தாயாரிடம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவருடன் பயணம் செய்த மற்றொரு நபர் காசம் அலி, ஈரானை சேர்ந்த அவர் மெஹர்தாத்தின் நண்பராக இருக்கலாம் என்றும் அவரும் ஜேர்மனியில் குடியேற திட்டமிட்டு சென்றிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
தாய்லாந்தில் 2 வருடங்களுக்கு முன் தொலைந்துபோன கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி இருவரும் விமானத்தில் சென்றுள்ளனர்.
காணாமல்போன விமானம்; போலி கடவுச்சீட்டில் பயணித்தவர்களின் திட்டம் என்ன?- தொடரும் மர்மங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 12, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment