துக்கத்தை வெளிப்படுத்த முதல் பக்கத்தை கறுப்பு நிறத்தில் வெளியிட்ட செய்தித்தாள்கள்
கடந்த மார்ச் 8ஆம் திகதி காணாமற்போன மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கியிருக்கும் என்றும், அதில் பயணித்தவர்கள் எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் மலேசியப் பிரதமர் நேற்று அறிவித்தார்.
இதனை அடுத்து துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக மலேசிய செய்தித்தாள்கள் இன்று கருப்பு நிறத்தில் முதல் பக்கத்தை அச்சிட்டிருந்தன.
மலேசியாவின் முக்கிய தினசரி பத்திரிக்கையான ஸ்டார் செய்தித்தாள் இன்று வெளியிட்டுள்ள பதிப்பில் முன்பக்கம் ‘ஆர்.ஐ.பி எம்ஹெச்370′ என்று வெளியிட்டுள்ளது.
அதன் பின்புறம் மறைந்த பயணிகளின் பெயர் சிறிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது.
‘நியூ ஸ்ரைட் டைம்ஸ்’ என்ற செய்தித்தாள் முதல் பக்கம் முழுவதையும் கறுப்பு நிறத்தில் அச்சிட்டிருந்தது. மேலும்,அப்பக்கத்தில் ‘குட் நைட் எம்ஹெச்370′ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
அதுதான் மலேசிய விமானத்தில் இருந்து வந்த கடைசி செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மலேசியாவில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கையான சன் தனது செய்தித்தாளின் பெயரைக் கருப்பு நிறத்தில் வெளியிட்டுள்ளது.
துக்கத்தை வெளிப்படுத்த முதல் பக்கத்தை கறுப்பு நிறத்தில் வெளியிட்ட செய்தித்தாள்கள்
Reviewed by NEWMANNAR
on
March 25, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 25, 2014
Rating:


No comments:
Post a Comment