அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போன விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவுகள் உண்ணா விரதம் இருக்கப் போவதாக மிரட்டல்.

மலேசிய அதிகாரிகள் துல்லியமாகத் தகவல்களை வழங்க தவறினால் உண்ணாவிரதம் இருப்போம் என்று காணாமல் மலேஷியா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சீன பயணிகள் உறவினர்கள் அச்சுறுத்தியுள்ளனர். குறித்த விமானத்தில் பயணித்த குடும்பங்கள், பெய்ஜிங்கில் விமான நிறுவனம் நடத்திய சந்திப்பு ஒன்றில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் இவ்வாறு எச்சரித்துள்ளனர். சீன நாட்டினர் 153 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்திருந்தனர். 


பயணிகளை அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டாம், உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டன. மலேஷிய அதிகாரிகள் இப்போது 2.24 மீற்றர் சதுர கடல் மைல் தூரத்தை உள்ளடக்கிய கடற்பரப்பிலேயே தேடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறுகிய முயற்சி. 25 நாடுகள் விமானம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

எனினும் இதுவரை சரியான தகவல்கள் எதும் இல்லை என்று மேலும் தெரிவித்தனர். இது குறித்து மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் விமானியின் இணைப்புகள் பற்றி ஊகங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன என்று கூறினார். 

மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இது குறித்துத் தெரிவிக்கையில், விமான MH370 தேடல் அரசியலை விட பெரியது. கப்டன் ஷாவின், சிறையில் உள்ள அரசியல்வாதி ஆதரவாளர் என்றும் இதனால் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் எழுகிறது எனவும் தெரிவித்துள்ளார். 
காணாமல் போன விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவுகள் உண்ணா விரதம் இருக்கப் போவதாக மிரட்டல். Reviewed by NEWMANNAR on March 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.