அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்ற சாத்வீக போராட்டம்-படங்கள்

இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் தடைகளினையும் தாண்டி தமிழ் மக்களுக்கான மனித மாண்போடு கூடிய நீதியான தீர்வை நோக்கி என்ற தொனிப்பொருளில் சாத்வீகப் போராட்டம் ஒன்று மன்னார் நகரில் இடம்பெற்றுள்ளது.

காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மாலை 3 மணிவரை இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரஜைகள் குழு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப் படுகொலைக்கு பக்கச்சார்பற்ற நீதியான சர்வதேச விசாரணை, இறுதி யுத்தத்தில் காணாமல் போனோரை காண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணைக்குழு அமைத்தல், முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இன அழிப்புத்தான் என்பதை சர்வதேசம் ஏற்று விசாரணை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினில் நாடளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை அமைச்சர்களான சத்தியலிங்கம், குருகுலராஜா, டெனீஸ்வரன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







மன்னாரில் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்ற சாத்வீக போராட்டம்-படங்கள் Reviewed by NEWMANNAR on March 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.