யாழில் காணியொன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் கைக்குண்டு மீட்பு.
யாழ். உரும்பிராயப் பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து பிஸ்டல் மற்றும் கைக்குண்டு ஆகியவற்றினை சனிக்கிழமை (22) மீட்டதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள காணியொன்றினைத் துப்பரவு செய்யும் போது, மேற்படி ஆயுதங்கள் இருப்பது இனங்காணப்பட்டு, தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இராணுவத்தினரின் உதவியுடன் அந்த ஆயுதங்களை மீட்டதாகவும் பொலிஸார் கூறினார்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் கூறினார்கள்.
யாழில் காணியொன்றிலிருந்து துப்பாக்கி மற்றும் கைக்குண்டு மீட்பு.
Reviewed by NEWMANNAR
on
March 23, 2014
Rating:

No comments:
Post a Comment