அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இளம் யுவதியைக் காணவில்லை - தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும் குடும்பத்தினர்

மன்னார் சாந்திபுரத்தை சேர்ந்த அஜித் லக்சிகா (வயது-16) என்பவர் கடந்த 14-02-2014 தொடக்கம் காணாமல் போயுள்ளதாக அவருடைய பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று குறித்த யுவதி தையல் வகுப்பிற்கு சென்றதாக பெற்றோர் தெரிவித்தனர். குறித்த யுவதி வீடு திரும்பாத நிலையில் தாம் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இதுவரை பொலிஸார் சரியான பதில் அளிக்கவில்லை எனவும் குறித்த யுவதியின் பெற்றோர் தெரிவித்துளனர்.

ஆனால் சம்பவ தினத்திற்கு மறு நாள் காலையும் மாலையும் (15-02-2014) குறித்த யுவதி தொலையேசியூடாக தாயுடனும் நண்பர்களுடனும் கதைத்துள்ளார்.தான் வவுனியாவில் தன்னுடைய உறவினர் ஒருவர் கொண்டு வந்து விட்டதாகவும் கூறியுள்ளனர். அதற்குப் பின்னர் இதுவரை எந்த வித தொடர்பும் கிடைக்கவில்லை.ஆனால் வவுனியாவில் இருந்து கதைப்பதாக கூறியது பொய் என தற்போது தெரியவந்துள்ளது. 

இவருடைய தந்தையார் கடந்த ஆறு வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு தற்போது புனர்வாழ்வில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் இல:-180/2 சாந்திபுரம் மன்னார் என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளும்படி  பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

தன்னுடைய மகளிற்கு என்ன நடந்தது என்பதை இதுவரை அறியாததால் மிகுந்த வேதனையுடன் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். தமது மகள்   காணாமல் போயுள்ளாரா ? அல்லது கடத்தப்பட்டுள்ளாரா? என்பது இது வரை தெரிய வில்லை. என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இளம் யுவதியைக் காணவில்லை - தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும் குடும்பத்தினர் Reviewed by NEWMANNAR on March 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.