இலங்கைத் தமிழருக்கு இங்கிலாந்தில் மரண தண்டனை-படங்கள்
இங்கிலாந்து சமர்செட் பிராந்தியத்தில் பெண் ஒருவரை தாக்கிக் கொலை செய்த இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வௌ்ளசாமி கோபிநாத் என்ற 36 வயதுடைய இலங்கையருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த வருடம் மயூரதி பேரின்பமூர்த்தி என்ற பெண்ணை தாக்கிக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோபிநாத்திற்கு 18 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சமர்செட்டில் அமைந்துள்ள ‘டியுடர் கோட்’ கட்டடத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதோடு, சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், சந்தேகநபரான கோபிநாத் கொலை செய்தமை உறுதியானதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனையில் குறித்த பெண் பலமுறை கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இலங்கையர் எனவும் தெரியவந்துள்ளது.\
கொலை இடம்பெற்ற வீடு
இலங்கைத் தமிழருக்கு இங்கிலாந்தில் மரண தண்டனை-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 05, 2014
Rating:

No comments:
Post a Comment