காணாமல்போன விமானம் வியட்னாமில் விபத்து
இரு குழந்தைகள், 12 விமானப்பணியாளர்கள் உள்ளிட்ட 239 பேருடன் சீனாவின் பீஜிங் நோக்கி மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பயணமாகிய மலேசியன் எயார்லைன் விமானம் வியட்னாம் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (08) காலை, மலேசிய நேரம் 2.40 (இலங்கை நேரம் அதிகாலை 5.10) மணிக்கு 227 பயணிகளை ஏற்றிக்கொண்டு பீஜிங் நோக்கி விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தின் பின்னர், வியட்னாம் வனப்பகுதியில் 35ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, விமானக்கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டமையால் விமானம் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வியட்னாம் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டபோது, வியட்னாமின் பூ குவாக் தீவிலிருந்து 153 கடல்மைல் தொலைவில் குறித்த விமானம் விபத்துக்குள்ளானதை ராடரில் அவதானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
காணாமல்போன விமானம் வியட்னாமில் விபத்து
Reviewed by Admin
on
March 08, 2014
Rating:

No comments:
Post a Comment