3000 பேஸ்புக் கணக்குகளை தடை செய்ய இலங்கை நடவடிக்கை
சுமார் 3000 பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் முறைபாடு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை முடக்குவதற்கு இலங்கையின் அவசர கணனி சம்பந்தனமான ஆய்வுகளை மேற்கொள்ளும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதம பொறியியலாளர் ரொசான் சந்தரகுப்தா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கணக்குகள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கலைத்துறை சார்ந்தவர்களே அதிக முறைபாடுகளை தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனிப்பட்டவர்களின் கணக்குகளில் தரவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படங்களைக் கொண்டு போலியான கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளமை குறித்த அதிக முறைபாடுகள் பதிவாகி இருக்கின்றன.
இவ்வாறானவற்றை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
3000 பேஸ்புக் கணக்குகளை தடை செய்ய இலங்கை நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
March 08, 2014
Rating:

No comments:
Post a Comment