மனைவியை தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்
கிளிநொச்சி, பூநகரி பகுதியில் மனைவியை தாக்கியதாகக் கூறப்படும் கணவனை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் உத்தரவிட்டார்.
சந்தேக நபரை மேற்படி நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (19) ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மனைவியின் கையை அடித்து முறித்ததாகக் கூறப்படும் கணவனை பூநகரி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (18) மாலை கைதுசெய்தனர்.
இதேவேளை, தாக்குதலுக்குள்ளான மனைவி பூநகரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மனைவியை தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்
Reviewed by NEWMANNAR
on
March 20, 2014
Rating:
(1).jpg)
No comments:
Post a Comment