மன்னார் உப்புக்குளம் மக்களின் பொது தேவைகளுக்காக இடத்தை ஒதுக்குமாறு வேண்டுகோள்
மன்னார் உப்புக்குளம் மக்களின் பொது தேவைகளை கருத்தில் கொண்டு அதற்காக இடம் ஒன்றை ஒதுக்கித்தருமாறு கோரி உப்புக்குளம் சன சமுக நிலையத் தலைவர் என்.எம்.ஆலம் மன்னார் பிரதேச செயலாளருக்கு புதன்கிழமை (19) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் பேரூந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பிரதான வடிகானுக்கு அருகாமையில் 'யுனைக்ஸ்' நிறுவன கட்டடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள காணியினை சில தனி நபர் சுவீகரிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
உப்புக்குளம் தெற்கு கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயே குறித்த காணி உள்ளது.
சில தனி நபர்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி தாம் குடியிருந்ததாக பிழையான ஆவணங்களை தயாரித்து இக்காணிகளை சுவீகரிக்க திட்டமிடுகின்றனர்.
இவர்களிடம் இருந்து இக்காணியை மீட்க வேண்டும். இதேவேளை, இக்கிராம மக்களுக்கு உப்புக்குளம் தெற்கு கிராம சேவையாளருக்கான அலுவலகம், சிறுவர் பாடசாலை, குடும்ப நல அலுவலகம் என்பன அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
எனவே மேற்படி அரச காணிகளை குறித்த தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்து வழங்குமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் உப்புக்குளம் மக்களின் பொது தேவைகளுக்காக இடத்தை ஒதுக்குமாறு வேண்டுகோள்
Reviewed by NEWMANNAR
on
March 20, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment