சித்திரை புத்தாண்டிற்கு முன்பு பரீட்சை பெறுபேறுகள் ;பரீட்சை திணைக்களம்
2013 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர (சாதாரண) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களது பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் தமிழ் - சிங்கள சித்திரை புத்தாண்டிற்கு முன்பு வெளியிடப்படுமென இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின்
ஊடக பிரிவின் அதிகாரியொருவர் கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த வருடம் இலங்கை முதற்தடவையாக அதிகமான பரீட்சார்த்திகள் க.பொ.த. சா/த பரீட்சைக்கு தோற்றினர். அதன் பிரகாரம் சுமார் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 140 மாணவர்கள் பரீட்சை எழுதியிருந்தனர். அவற்றில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 56 பேர் பாடசாலையினூடாக பரீட்சைக்கு தோற்றியிருந்த அதேவேளை, 1 இலட்சத்து 94 ஆயிரத்து 84 பேர் வெளிவாரியாக பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
அத்துடன், மேற்படி பரீட்சையானது 4312 நிலையங்களில் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த வருடத்திற்கான க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்பரல் மாதம் தமிழ் - சிங்கள சித்திரை புத்தாண்டிற்கு முன்பு வெளியிடப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சித்திரை புத்தாண்டிற்கு முன்பு பரீட்சை பெறுபேறுகள் ;பரீட்சை திணைக்களம்
Reviewed by NEWMANNAR
on
March 07, 2014
Rating:

No comments:
Post a Comment