வற்றாப்பளை முருகன் ஆலயத்தில் திருட்டு.
முல்லைத்தீவு , வற்றாப்பளை முருகன் ஆலயத்திலுள்ள பெறுமதியான பொருட்கள்
திருடப்பட்டுள்ளன .
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை முருகன் ஆலயத்தில் நேற்று அதிகாலை ஆலயத் துப்புரவுப் பணிக்குச்சென்ற நபர் , ஆலயத்திலுள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதை அவதானித்து முள்ளியவளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
அத்துடன் ஆலயத்தின் ஓடு பிரிக்கப்பட்டுள்ளதுடன் உண்டியல் உடைக்கப்பட்டும் ஆலய பயன்பாட்டில் இருந்த ஒலிபெருக்கிச் சாதனங்கள் , பிள்ளையார் விக்கிரகத்தின் கீழுள்ள தகடு என்பனவும் திருடப்பட்டுள்ளன .
இதேவேளை மூலஸ்தான கதவை உடைக்க முற்பட்டு திரைச்சீலைகளின் உதவியுடன் கதவை எரிக்க முயற்சித்தபோதும் உடைக்கமுடியாமல் போக திருடர்கள் திரும்பிச் சென்றுள்ளனர் .
வற்றாப்பளை முருகன் ஆலயத்தில் திருட்டு.
Reviewed by NEWMANNAR
on
March 05, 2014
Rating:

No comments:
Post a Comment