அண்மைய செய்திகள்

recent
-

சிறுமியுடன் குடும்பம் நடத்தியவருக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவு -மன்னார் பதில் நீதவான்

பதின்நான்கு (14) வயதுடைய சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக கூறி அச்சிறுமியை கர்ப்பிணியாக்கிய மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மூன்றாம் பிட்டி பாலியாறு பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ உத்தரவிட்டார்.

சந்தேகநபர் அப்பகுதியைச் சேர்ந்த  14 வயதுடைய  சிறுமியுடன் காதல் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்னர் அவரைத் திருமணம் செய்வதாக கூறி அவருடன் உறவுகொண்டுள்ளார்.இதன் காரணமாக குறித்த சிறுமி கருவுற்றுள்ளார். 
சிறுமியொருவர் கர்ப்பிணியாக இருப்பது தொடர்பில் சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரிகளின் கவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அதிகாரிகள் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இதனைடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து வாக்குமூலத்தை பெற்றதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்தும் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர்.

அதன்பின்னர் பொலிஸார்  சந்தேகநபரை கடந்த சனிக்கிழமை (2) பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் . இதனையடுத்தே சந்தேகநபரை எதிர்வரும் 2 ஆத் திகதி வரையிலும் விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியுடன் குடும்பம் நடத்தியவருக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவு -மன்னார் பதில் நீதவான் Reviewed by NEWMANNAR on March 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.