இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் பேய்பால் முறைமை அமுல்!
சர்வதேச இணையத்தள பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற பேய்பால் முறைமை இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் அமுலாக்கப்படவுள்ளது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய சட்டத்தின் படி பேய்பால் ஊடாக வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்பவோ அல்லது கட்டணங்களை செலுத்தவோ முடியும்.
எனினும் வெளிநாட்டில் இருந்து பேய்பால் வழியாக உள்நாட்டுக்கு பணத்தை பெற அனுமதிவழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த சட்டத்தை மாற்றி இலங்கையில் பேய்பாலுக்கு முழு அங்கீகாரத்தையும் வழங்கும் வகையிலான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அஜித்நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் பேய்பால் முறைமை அமுல்!
Reviewed by NEWMANNAR
on
March 31, 2014
Rating:

No comments:
Post a Comment