வவுனியாவில் போலி கைத்துப்பாக்கிகளுடன் ஐவர் கைது
வவுனியாவில் போலி கைத்துப்பாக்கிகளுடன் காரில் பயணித்ததாகக் கூறப்படும் 05 பேரை வவுனியா பொலிஸார் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை (27) அதிகாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற காரொன்றை வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள கல்குனாமடுச் சந்தியில் இடைமறித்துச் சோதனையிட்ட பொலிஸார், அக்காரினுள்; போலி கைத்துப்பாக்கிகள் 02, கையுறைகள் 10 மற்றும் போலி இலக்க தகடுகள் சிலவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இச்சந்தேக நபர்களை கைதுசெய்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் கூறினர்.
இச்சந்தேக நபர்களில் 04 பேர் கொழும்பையும் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவர்களாவர்.
இவர்களுக்கு பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வவுனியாவில் போலி கைத்துப்பாக்கிகளுடன் ஐவர் கைது
Reviewed by NEWMANNAR
on
March 28, 2014
Rating:

No comments:
Post a Comment