மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் பிற்போடப்பட்டது.
கொழும்பில் இன்று நடைபெறவிருந்த இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.
இந்திய பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகைதராமையினால் பேச்சுவார்த்தையை மீண்டும் பிற்போடுவதற்கு நேர்ந்துள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி கூறினார்.
மீனவர்கள் பிரதிநிதிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மாட்டார்கள் என இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவித்ததாக கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன கூறினார்.
ஆயினும், இந்திய மீனவர்கள் இணக்கப்பாட்டினை மீறும் வகையில், தொடர்ச்சியாக வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்ட பிரதியமைச்சர், இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டினார்.
மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் பிற்போடப்பட்டது.
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:

No comments:
Post a Comment