அனுமதிப்பத்திரமின்றி கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்தவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
மன்னாரில் அனுமதிப்பத்திரமின்றி கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்ததாக
சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றத்தினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும், ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பலடானோ தீர்ப்பளித்தார்.
நேற்று புதன் கிழமை மன்னார் பொலிஸார் சந்தேக நபரை மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன் போது சந்தேக நபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டமையால் பதில் நீதவான் மேற்படி தண்டனையை வழங்கினார்.
ஏற்கனவே இச்சந்தேக நபருக்கு இரண்டு முற் குற்றங்கள் காணப்பட்டமையாலே ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுமதிப்பத்திரமின்றி கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்தவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:

No comments:
Post a Comment