அண்மைய செய்திகள்

recent
-

ஆகம நட்சத்திரம் கலாநிதி சிவஸ்ரீ சபா மனோகரக் குருக்கள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை-23.03.2014


அருள் நெறியாகிய சைவநெறி, அறிவு நெறியாகிய வைதீக நெறியுடன் ஒன்றிணைந்து வைதீக சைவம் என்னும் சிறப்புப் பெற்று விளங்குகின்றது. இச் சைவநெறி வளர்ச்சியடைவதற்குரிய பணிகள் சைவப்பிரசங்கம் செய்தல், தமிழ், சமஸ்கிருதம் என்னும் இரு மொழிகளிலும் உள்ள பழைய நூல்களை அழிந்துவிடாமல் பாதுகாத்தல், புதிய நூல்களை வெளியிடல் எனப் பலவகைப்பட்டன.

குருக்கள் அவர்கள் சைவப்பிரசங்கம் செய்தல், பேசுதல், பழைய நூல்களைப் பாதுகாத்தல், புதிய நூல்கள் உருவாக்க உதவி செய்தல் முதலிய மேலான சிவ புண்ணியச் செயல்களிலும், தன்னால் இயன்ற திருப்பணிகளாகிய தீர்த்தக்கிணறு, வசந்த மண்டபம், ஓவிய வேலைப்பாடு, சண்டேஸ்வர ஆலயம் போன்றவற்றை வசதி குறைந்த ஆலயங்களுக்கு அமைத்தும் தம்மை ஈடுபடுத்தி வருவதோடு மட்டுமல்லாது முப்போதும் திருமேனி தீண்டுவதன் பெருமையின் பயனையும், கிரியைகளில் தமது காலம் முழுவதையும் பயன்படுத்தி தூய வாழ்க்கை நடாத்தி வருகின்ற பெரியார் ஆவார்.


தாய் தந்தையர்

சிவஸ்ரீ சபா மனோகரக் குருக்கள் அவர்களின் தந்தையார் கரவெட்டி துன்னையூரில் அந்தண குலத்தில் ஆர்ஷேய காசிப கோத்திரத்தில் ஆபஸ்தம்ப சூத்திரத்தினை அனுசரிப்பவராக பிறந்த சங்கர ஐயர் புத்திரர் சபாரத்தினக் குருக்கள் என்பவர். இவ்  சபாரத்தினக் குருக்கள் தமது பாரம்பரியமாகவே அம்பன் பிள்ளையார், கந்தசாமி கோவில், துன்னையூர் தாமரைக்குளத்தடி நரசிம்ம வைரவர் போன்ற ஆலயங்களில் தன்னுடைய அன்றாட கடமையை புரிந்தவர். சிவபூஜையினைக் கிரமம் தவறாது புரிந்தவர். தமது குருத்துவத்தை பரம்பரையாக தாமும் சிரத்தையுடன் செய்து கொண்டு நல்வாழ்வு நடத்தியவர். இவரின் மனைவி மீனாட்சிஅம்மா ஆவார்.

ஜனனம்

இவ் இருவருக்கும் புத்திரராக கர வருடம் ஆவணி மாதம் 21ஆம் திகதி ( 06.09.1951 ) வியாழக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் சிவஸ்ரீ சபா மனோகரக் குருக்கள் ஜனனமாகினார். 

கல்வி பயிலல்

வித்தியாரம்பம், உபநயனம் அம்பன் பிள்ளையார் கோவிலில் வைத்து செய்யப்பெற்ற இவர், தமது கிராமத்திலேயே கல்வி பயின்று வந்தனர். பின் இவருடைய தந்தையார் சபாரத்தினக் குருக்கள் தானே குருவாகவும் இருந்தார். பின்பு அதே ஊரைச் சேர்ந்த சமஸ்கிருத வித்தகர் சிவஸ்ரீ சின்னக்குரு குருக்களிடம் கல்வி பயில வைத்தார். சமஸ்கிருதத்துடன் தமிழையும் கற்றுக் கொண்டு அதன் பின் இந்தியாவில் உள்ள சேலம் எனும் இடத்திலுள்ள உடையாபிட்டி சமஸ்கிருத கலாசாலையில் சேர்ந்து படிப்பை முடித்ததுடன் அங்கேயே மிக முக்கியமான சமய விசேஷ, நிர்வாண தீட்சைகள் அடங்கிய அசத்யோ நிர்வாண தீட்சை பெற்று ஆசார்யாபிஷேகம் பெற்றுக்கொண்டார். இவருடைய தீட்ஷா நாமம் 'ஈசான சிவாச்சாரியம்'.

அந்தண சமூக மேம்பாடு

அந்தண சமுதாயத்தில் சிவாச்சார்ய மரபினரை மேம்படுத்தி வருகின்ற நிறுவனமாகிய இந்து குருமார்கள் பேரவை தலைவராக விளங்குகின்றார். இவர் குறிப்பாக மன்னார் மாவட்ட கோவில்களில் இடம் பெறும் கட்டடம், சிற்பம் தொடர்பான சிவாகமத்திற்கு முரண்பாடான வழிகளை விலக்கி சமூகத்தினை வழிநடத்தும் சிறந்த அறிவாளராகவும் திகழ்கின்றார். குருக்கள் அவர்கள் வயது ஐம்பதில் தாய்லாந்து, சிங்கப்பூர், இலண்டன், பிரான்ஸ், ஜேர்மன், தென் இந்தியா, வட இந்தியா யாத்திரையினை மேற்கொண்டார். அங்கு பல சிவாலயங்களையும் தேவி, விஷ்ணு முதலிய தெய்வங்களின் ஆலயங்களையும் தரிசித்து வந்தார்;. அவர்கள் தரிசித்த சிவாலயங்களில் கோவில் எனச் சிறப்பிக்கப்படும் சிதம்பரம் கோவிலின் பூஜை முறைகள் அவரின் கவனத்தை நன்கு கவர்ந்து கொண்டது. பூஜை முறையை தனது மரபோடு இணைந்து தனது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் செயல்களில் உயர்விருப்பம் உடையவராகத் திகழ்கின்றார்.

கிரியைகள் செய்தல்

சிவஸ்ரீ சபா மனோகரக் குருக்கள் ஐயா அவர்கள் கிரியைக் கர்மங்களை முற்றுமுணர்ந்து மந்திரம், கிரியை, பாவனை மூன்றும் ஒன்றுசேரத் தரிசிப்போரை பரவசமடையச் செய்பவர். கோவில் கிரியைகளோடு மட்டும் அல்லாது சைவஸ்மார்த்தக் கிரியைகளையும் செய்து வைப்பதில் ஈடிணையற்றவர். மன்னார் மாவட்ட மக்கள் இவர் கிரியை செய்து வைப்பதைப் பெறுதற்கரிய பேறாகக் கருதுகின்றனர். இவர்களுடன் கல்பிட்டி மக்களும் சேர்ந்து கொண்டனர். குருக்கள் அவர்களால் செய்து வைக்கப்பட்ட கும்பாபிஷேகங்கள், உற்சவங்கள் பல. கிரியையை நிகழ்த்தும் போது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒன்று சேர்த்து நேரத்தையும், உணவையும் கூட பொருட்படுத்தாது உரிய நியதிப்படி நிகழ்த்தி வைப்பார்கள். அவர்  பொருள் வருவாயைப் பொருட்படுத்துவதில்லை.

அருள், அறிவு, ஒழுக்கம், உதாரணகுணம் முதலியன நிறையப் பெற்ற குருக்கள் அவர்கள் தமிழ், சமஸ்கிருதம் இரண்டினையும் இரு கண்ணெனப் போற்றுபவர். ஆகம மரபு அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனைத் தமது இலட்சியமாகக் கொண்டவர். 



பட்டங்களின் மூலம் கௌரவம் பெறல்.

கமலபூசணம் - மன்னார் ஞானவைரவர் தேவஸ்தானத்தில் வைத்து நீதிபதி திரு.மு.திருநாவுக்கரசு அவர்களால் வழங்கப்பட்டது. (1996)
அகில இலங்கை சமாதான நீதவான். (2001)
சிவாச்சாரிய திலகம் - காட்டாஸ்பத்திரி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வைத்து பொது மக்களால் வழங்கப்பட்டது. (2003)
தேசசக்தி - கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களால் வழங்கப்பட்டது. (2005)  
தேசபந்து - இலங்கை சமாதான நீதவான் மனித உரிமை அமைப்பினால் வழங்கப்பட்டது. (2008)
தேசகீர்த்தி - இலங்கை சமாதான நீதவான் மனித உரிமை அமைப்பினால் வழங்கப்பட்டது. (2008)
கலாநிதிப்பட்டம் - ஐNவுநுசுNயுவுஐழுNயுடு ருNஐஏநுசுளுஐவுலு குழுசு ஆயுசுவுஐயுடு யுசுவு அமைப்பினால் வழங்கப்பட்டது. 
கிரியாசிரோன்மணி – பேசாலை முருகன் ஆலய பொதுமக்கள் மற்றும் நிர்வாகசபையினால் வழங்கப்பட்டது. (2009)
ஆகமகிரியாபாவணர் – கற்பிட்டி ஸ்ரீ முருகன் ஆலய பொது மக்கள் நிர்வாகசபையினால் வழங்கப்பட்டது.
சமூகரெத்தினா – புதுக்குடியிருப்பு மணல்குளம் ஆலயத்தில் சர்வமத அமைப்பு மற்றும் இந்து ஆலயங்களின்  ஒன்றியத்தினால் வழங்கப்பட்டது.
சமூகஒளி – கீரி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் வைத்து சர்வமத அமைப்பினால் வழங்கப்பட்டது.
நாவலர் விருது - இவருடைய 40 வருட கால சேவையைப் பாராட்டி மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையம் வழங்கி கௌரவித்தது.
சிவச்செம்மல் - புதுக்குடியிருப்பு மணற்குளம் ஆலய பரிபாலன சபை மற்றும் பொது மக்களும்

இவ்வாறாக குருக்கள் அவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டதால் அவருடைய ஊர் மக்களான மன்னார் மக்கள் மேம்பாடடைந்தனர்.

சமூகத்தில் சிறப்பிடம் பெறல்.

தம்முடையதும் தன்னைச் சார்ந்ததுமான சைவ சமூகத்தவர்களிடையே சிறப்பிடம் பெற்ற சிவஸ்ரீ சபா மனோகரக் குருக்கள் அவர்களினையே தமது குருவாக வடித்து தமது இல்லங்களில் நூதன கிரகப்பிரவேசம், புதிய கடைகள் திறத்தலுக்கான சாந்திகள் செய்தல், அடிக்கல் நாட்டுதல், சிவபூஜைகள் செய்வித்தல், திருமணக் கிரியைகள் நடாத்துதல். திருமணக் கிரியைகளில் சிறப்பு என்னவென்றால் ஆயிரம் திருமணக் கிரியைகளை தாண்டிவிட்டார். அதைவிட திருமணம் செய்து வைத்த அவர்களின் பிள்ளையின் திருமணம், பேரப்பிள்ளைகளின் திருமணம், என மூன்று தலைமுறைக்கு சிறப்பிற்குரியவர். மேலும் குருக்கள் அவர்கள் மீது மதிப்புள்ளவர்கள் ஏனைய மாவட்டங்களான கண்டி, கொழும்பு, வவுனியா, கற்பிட்டி ஆகிய இடங்களுக்கு அழைத்து கிரியைகளை நடாத்தி மகிழ்வாhகள். இதன் மூலம் பூரண பயனையும் திருப்தியையும் அடைந்தனர்.

இவ்வாறாக சிவப் பணிக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகின்ற சிவஸ்ரீ சபா மனோகரக் குருக்கள் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு வழிகளிலும் பரப்படைந்து செல்கின்றது. அதனைப் பாராட்டும் முகமாகவே மன்னார் வாழ் மக்களும், இந்துக் குருமார் பேரவையும் இணைந்து அவரது மணிவிழாவையும், நாற்பது ஆண்டுகள் சேவை நலன் பாராட்டு விழாவையும் எடுத்துப் பாராட்டி தாமும் கௌரவம் பெற்றவர்களாகின்றனர்.

பிற சமய தொடர்புகள்

சிவஸ்ரீ சபா மனோகரக் குருக்கள் அவர்கள் ஒரு மதவாத சிந்தனையற்றவர். தனது சமயம் எவ்வளவு பெரிதோ அதைவிட பிற சமயங்களை மதிக்கும் தன்மையுடையவர். எல்லாச் சமயங்களையும் மதிக்கின்ற தன்மை, அவர்களையும் அரவணைப்பது போன்றன ஆகும். இதற்கு சான்றாக மன்னார் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ, முஸ்லீம் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவரும் ஏனைய மதத் தலைவர்கள், மக்கள் இவர் மேல் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளமையும் ஆகும்;. அத்துடன் புத்த சமய குருமார்களால் (சர்வமத அமைப்பின் மூலம்) பெரிதும் விரும்பப்படுபவர். இவருடைய பேச்சை எப்பொழுதும் ஞாபகம் வைத்து வவுனியா, அனுராதபுர புத்த குருமார்கள் கூறுவார்கள்; இப்படி பல வகையிலும் சிறப்பு பெற்றவர். பிற சமய விழாக்களுக்கு குருக்கள் அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்து இவரின் பிரசங்கங்களையும் கேட்டு மகிழ்வார்கள் என்றால் மிகையாகாது. இது ஒன்றே இவர் ஒரு சிறப்புப் பெற்றவர் என்பதற்கு அடையாளமாகும்.

பொது அமைப்புகளின் தொடர்புகள்

சிவஸ்ரீ சபா மனோகரக் குருக்கள் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள சமூக சேவை நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமய நல்லிணக்க நிறுவனங்கள் என்பனவற்றில் ஏதாவதுவொரு முக்கிய அங்கம் இவருக்கு வழங்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும். மேலும் இவர் இன முரண்பாடுகளுக்கான சமாதான வேலைத்திட்டங்கள் தொடர்பாக நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சில வெளிநாடுகளுக்கும் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

திரு. சந்நிரலிங்கம் ரமேஸ் து.P
டீயு (ஊநல)இனுip in வுநயஉhiபெ ர்in(ளிட)இPபு னுip in நுனரஇPபு னுip ஐn நுனர ஆபவஇ     ஆயு in வுயஅடை( ஆநசவை) ருniஎநசளவைல ழக துயககயெ

ஆகம நட்சத்திரம் கலாநிதி சிவஸ்ரீ சபா மனோகரக் குருக்கள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை-23.03.2014 Reviewed by NEWMANNAR on March 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.