அண்மைய செய்திகள்

recent
-

கோபியை பற்றிய தகவல் வழங்குவோருக்கு பத்து லட்சம் பரிசு

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கஜாதீபன் செல்வநாயகம் எனப்படும் கோபி பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தகவல் வழங்குவோரின் இரகசியத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.


மற்றுமொரு புலிச் சந்தேக நபர் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கும் பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 36 வயதான நவரட்னம் நவனீதன் எனப்படும் அப்பன் என்ற சந்தேக நபர் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இருவர் பற்றிய தகவல்களை அறிவிக்க விரும்புவோர் 0112451636 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது  0112321838 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவித்துள்ளனர், 

கோபியின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் மீள ஒருங்கிணைவதாக அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அண்மையில் அறிவத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோபியை பற்றிய தகவல் வழங்குவோருக்கு பத்து லட்சம் பரிசு Reviewed by NEWMANNAR on March 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.