மாங்குளத்தில் மண்டையோடு; அருகில் கைப்பையும் காலணியும் கண்டுபிடிப்பு
மாங்குளம் பகுதியில் இன்று காலை மனித மண்டையோடு ஒன்றும், எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாங்குளம் பகுதியூடான ஏ9 வீதியின் 225 ஆவது மற்றும் 226 ஆவது மைல்கற்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த மண்டையோடும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் காணியொன்றை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் இந்த மண்டையோடும் எச்சங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மனித எச்சங்களுக்கு அருகிலிருந்து காலணி, கைப்பை போன்ற பொருட்களுடன், கறுப்பு நிறத்திலான காற்சட்டை மற்றும் வெள்ளைநிற மேற்சட்டை என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாங்குளத்தில் மண்டையோடு; அருகில் கைப்பையும் காலணியும் கண்டுபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
March 13, 2014
Rating:

No comments:
Post a Comment