புதிதாக இந்திய வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டபயனாளிகள் சம்பந்தமான கூட்டம் தொடர்பான அறிவித்தல்
.jpg)
முசலிபிரதேசசெயலாளர்பிரிவுகளில்இந்தியவீட்டுத்திட்டத்திற்காகதெரிவுசெய்யப்பட்ட புதியபயனாளிகளிக்கான விசேட கூட்டம் ஒள்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவுசெய்யப்பட்டபயனாளிகள் அபிப்பிராயங்களையும் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி முசலி பிரதேச செயலாளர் பிரிவில் எதிர்வரும் 18ம் திகதி காலை 10 மணிமுதல் 12;:30 மணிவரை சிலாவத்துறையிலும் , பிற்பகல் 2:00 மணிதொடக்கம் பிற்பகல் 4:00 மணிவரை முத்தரிப்புத்துறை மேற்கிலும், பிற்பகல் 4:30 முதல் 6:30 வரை முத்தரிப்ர்த்துறை கிழக்கிலும் அதன் கிராமசேவகர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
இதேபோன்று எதிர்வரும் 24ம் திகதி காலை 10:30 மணியளவில் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைஇலுப்பைக்குளம், கல்மடு, பரசன்குளம், விளாத்திக்குளம் ஆகிய கிராமங்களுக்குட்பட்ட கிராமசேவகர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதேபோன்று 25ம் திகதி காலை 10:30 மணியளவில் பூமலந்தன் கிராமத்தில் கிராமசேவகர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
குறித்த தினம் பிற்பகல் 2:00 மணியளவில் மாதாக்கிராமம் கிராமசேவகர் அலுவலகத்திலும்
அதேபோன்று 26ம் திகதி காலை 10:00 மணியளவில் பலம்பிட்டி, மடு, பெரியபண்டிவிரிச்சான் மேற்கு, பெரியபண்டிவிரிச்சான் கிழக்கு, கீரிசுட்டான், தேக்கம் அகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு மடு பிரதேச செயலகத்திலும்; நடைபெறுகிறது.
அதேபோன்று 27ம் திகதி காலை 10:30 மணியளவில் பன்னவிடுவான் கிராம மக்களுக்கான கூட்டம் அதன் கிராம சேவகர் அலுவலகத்திலும் அதோதினம் பிற்பகல் 2 :00 மணியளவில் கட்டைஅடம்பனில் கிராம சேவகர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ள.
புதிதாக இந்திய வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டபயனாளிகள் சம்பந்தமான கூட்டம் தொடர்பான அறிவித்தல்
Reviewed by Author
on
March 14, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment