அண்மைய செய்திகள்

recent
-

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை ஆரம்பம்

இந்திய- இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை கச்சதீவு திருவிழாவிற்காக தமிழகத்திலிருந்து பங்கு கொள்ள 3,460 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

இராமேஸ்வரம் தீவிலிருந்து 12 மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவிலிருந்து 8 மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்ப்பரப்பில் கச்சதீவு அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது.

1983 ஆம் முதன்முதலாக இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சதீவு விழா நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இலங்கையில் உள்நாட்டு போர் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 2002 இல் மீண்டும் கச்சதீவு அந்தோனியார் திருவிழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கச்சதீவு திருவிழா தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 95 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் படகுகளில் 2,972 ஆண்கள், 347 பெண்கள், 141 குழந்தைகள் என மொத்தம் 3,460 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் படகு உரிமையாளர்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. அடையாள அட்டை இன்றி யாரும் கச்சதீவு திருவிழாவிற்கு பயணிக்க முடியாது.
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை ஆரம்பம் Reviewed by NEWMANNAR on March 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.