மனிதாபிமான பண்புகளை மக்களிடத்தில் செயற்படுத்த தொண்டர்களுக்கான விசேட முகாம் -படம்
சமூகங்களிடையே மறைந்து போகும் மனிதாபிமான பண்புகளை வளர்த்தெடுக்கும் முகமாகவும் தொண்டர்கள் மத்தியில் செயல் விருத்தியை ஏற்படுத்தும் பயிற்சி முகாம் ஒன்று நேற்று மாலை மன்னார் தாழ்வுபாடு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வினை இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட கிளை ஒழுங்கு செய்திருந்தது.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளை மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளான மன்னார், மாந்தை மேற்கு , மடு, முசலி, நானாட்டான் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சமூக சேவையில் இணைந்திருக்கும் மூத்த மற்றும் புதிய சமூகசேவை தொண்டர்கள் அனைவரையும் இணைத்து ஒன்று கூடலொன்று நேற்று மாலை நடைபெற்றது.
சமூகங்களிடையே மறைந்து போகும் மனிதாபிமான பண்புகளை வளர்த்தெடுக்கும் முகமாகவும் தொண்டர்கள் மத்தியில் செயல் விருத்தியை ஏற்படுத்தும் முகமாக தொண்டர்களிடையே தலைமைத்துவ மற்றும் குழுவாக செயற்படும் பண்புகளை வளர்த்தெடுக்கவும் இவ் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முகாமில் சுமார் 150 சமூக தொண்டர்கள் பங்கு பெறுகின்றனர்
நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த முகாம் செயற்பாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெற்றது.
இந்நிலையில் முதல் நாளான நேற்று தொண்டர்களுக்கான தலைமைத்துவ தெளிவூட்டலை அருட் சகோதரர் வழங்கியிருந்தார்
இதேவேளை மூத்த மற்றும் புதிய தொண்டர்களுக்கான கௌரவ விருதுகளை அதீதிகள் வழங்கிவைத்தனர்.
குறித்த நிகழ்விற்கான அனுசரனையினை பிரபல சமூகசேவகர் சாள்ஸ் நிமலநாதன் உட்பட ஏனைய வர்த்தகர்கள் வழங்கியிருந்தனர்.
குறித்த நிகழ்வில் விசேட விதமாக எஸ்.ஜெரோம் அவர்களுக்கு மன்னார் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கௌரவ விருது வழங்கி கௌரவித்தார்
இதன் பின் தீச்சுடர் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன அதன்போது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள் நேற்று இரவு 11 மணிவரை நடைபெற்றது
இன்நிகழ்வில் இன்று காலை சமூகசேவகர் சாள்ஸ் நிமலநாதன் கலந்து சிறப்பித்தார்
இதனை அடுத்து இன்று இவர்களுக்கான குழுசெயற்பாட்டிற்காக 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு பல நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதேவேளை நேற்றைய நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக ஜெரோம் ,சிறப்பு விருந்தினராக உதவி அரசாங்க அதிபர் பரமதாஸ், டிலாசால் சபையின் அருட்சகோதரர் யோகநாதன் ,மன்னார் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான், பாடசாலையின் அதிபர் ஸ்டான்லி டி மெல் ,மன்னார் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.கெனடி, செஞ்சிலுவை சங்க கிளை நிறைவேற்று அதிகாரி குகன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Reviewed by Author
on
March 09, 2014
Rating:

No comments:
Post a Comment