திருப்பதி உண்டியலில் இருந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் பாதி விலைக்கு ஏற்பு
திருப்பதி உண்டியலில் இருந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் பாதி விலைக்கு ஏற்பு
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் சேரும் காணிக்கையில்,கிழிந்த மற்றும் சேதமான ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி பாதி மதிப்பிற்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
திருமலை திருப்பதி கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் சேரும் சேதமடைந்த, கிழிந்த ரூபாய் நோட்டுகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது.
மேலும் இதுப்படி 21 மூட்டைகள் நிறைய செல்லாத நோட்டுகள் குவிந்ததை அடுத்து, கோயில் நிர்வாகம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இது குறித்து ஆலோசித்தது.
வங்கி அதிகாரிகள், ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு, அவை பெருமளவில் சேதடைந்த நிலையில் இருந்ததால், அவற்றை பாதி மதிப்பிற்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். அதை திருமலை தேவஸ்தான நிர்வாகம் ஏற்றுக்கொண்டது
இதைதொடந்துÂ சேதமான பணத்தைப் பெற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி, பாதி மதிப்பிலான தொகையை திருமலை தேவஸ்தான வங்கிக் கணக்கில் சேர்த்துவிட்டது.
திருப்பதி உண்டியலில் இருந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் பாதி விலைக்கு ஏற்பு
Reviewed by NEWMANNAR
on
March 09, 2014
Rating:

No comments:
Post a Comment