அண்மைய செய்திகள்

recent
-

மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் தேசிய மட்டத்தில் அதிகஅளவிலான பதக்கங்களை பெற பயிற்சி-படங்கள்

மன்னார் மாவட்ட மெய்வல்லுனர் விளையாட்டுத் துறையினை சிறந்த முறையில் பயிற்றுவித்து தேசிய மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் விளையாட்டு பயிற்ச்சி முகாம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.;30 மணியளவில் முருங்கன் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது

வடக்கு மாகாண மாவட்ட விளையாட்டு அதிகாரிகளின் தலைமை அதிகாரி ஜெகநேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த பயிற்சி முகாமினை மன்னார் மாவட்டத்தின் பிரபல சமூக சேவகர் சாள்ஸ் நிமலநாதன் ஆரம்பித்து வைத்தார்
இதன்போது மெய்வல்லுனர் சங்க செயலாளர் ஞானராஜ் மடாவட்ட உதைபந்தாட்ட தலைவர் ஜேராள்ட் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

குறித்த விளையாட்டு பயிற்ச்சிமுகாம் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 100 பேர் குறித்த மெய்வல்லுனர் போட்டி பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று பயனடையவுள்ளனர்.

விசேடமாக கொழும்பிலிருந்து வருகைதந்துள்ள விசேட பயிற்றுவிப்பாளர்களால்  குறித்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
குறித்த விளையாட்டு பயிற்;சிகளின் போது தெரிவுசெய்யப்படும் 15 சிறந்த விளையாட்டு வீரவீராங்கனைகள் மாவட்ட மெய்வல்லுனர் குழுவில் உள்வாங்கப்பட்டு தேசிய மட்டத்திலான மெய்வல்லுனர் போட்டிகளில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் பங்குபற்றி மாவட்த்திற்கு பதக்கங்களை பெற்றுதரவென குறித்த பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி இளைஞர்களின் விளையாட்டுத்திறளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்த சமூகஆர்வலர் சாள்ஸ் நிமலநாதன் குறித்த பயிற்சிகளுக்கான சகல உதவிகளையும் வழங்கியுள்ளார்.



















மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் தேசிய மட்டத்தில் அதிகஅளவிலான பதக்கங்களை பெற பயிற்சி-படங்கள் Reviewed by Author on March 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.