அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண சிவில் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்த விசேடதிட்டம் முன்னெடுப்பு

வட மாகாணத்தில் சிவில்சேவை அமைப்புக்களை பலப்படுத்தி விசேட திட்டம் ஓன்றை செயற்படுத்த வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மன்னாருக்கான விஜயம் ஒன்றை நேற்று மேற்கொண்டிருந்தார்.

குறித்த விஜயத்தை அடுத்து சிவில் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்த விசேட செயலமர்வு ஒன்று மன்னார் ஆகாஸ் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று சனிக்கிழமை காலை 8மணிமுதல் மாலை 5 மணிவரை குறித்த செயலமர்வு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வுகளில் வவுனியா,மன்னார் மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்ரமசிங்க, மன்னார் பொலிஸ் நிலைய அத்தியகட்சகர் சரத் குமார ஜோசப்,மன்னார் பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் அத்தியகட்சகர் ஜ.பி.ரி.சுகதபால,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துசார தளுவத்த உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களின் பொலிஸ் அத்தியகட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

இதன்போது மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை சேர்ந்த அனைத்து சமயங்களையும் பிரதிநிதித்துவபடுத்தக்கூடிய ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள், தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகள், வைத்தியர்கள், மாதர் அமைப்பு பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வில் சிவில் அமைப்புகள் அமைக்கப்படுவதின் நோக்கம்;, சமூகத்தில் ஏற்படக்கூடிய பாரதூரமான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், எதிர் காலத்தில் சிவில் அமைப்புகளின் நடவடிக்கைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் செயற்திட்டங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்களை வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர முன்வைத்து சிவில் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இதன்போது பொலிசாருடன் பொது மக்கள் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான தேவைகள் குறித்து ஆராயப்பட்டது.
அண்மைக்காலமாக வட மாகாணத்தில் அதிகரித்து வரும் பாலியல் துஸ்பிரயோகங்கள் அடையாளம் காணப்பட்டு அதை தடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்
மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம், அலுவலகங்களில் நடைபெறும் பாலியல் இலஞ்சம், இளம் சமூகத்தினரை குற்ற செயல்களிலிருந்து தடுப்பது, போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் பாவனை, பணமோசடி உள்ளிட்ட பல பிரச்சினைளை தடுப்பதற்கு ஏடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது சிவில் பாதுகாப்பு தலைவர்கள் 5 குழுக்களாக நியமிக்கப்பட்டு குறித்த 5 குழுக்களிடமிருந்து சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள் அதனை தீர்ப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போது குறித்த குழுக்களால் அடையாளம் கணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அதனை தீர்ப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக பல முன் மொழிவுகள் முன்வைக்கப்பட்டது.

இதில் உரையாற்றிய வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர எடுக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்
இறுதியில் சிவில் பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்களுக்கு விசேட அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.















வட மாகாண சிவில் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்த விசேடதிட்டம் முன்னெடுப்பு Reviewed by Author on March 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.