நன்நீர் மீன்வளர்ப்பு திட்டம் மன்னாரில் ஆரம்பித்துவைப்பு-படங்கள்
மன்னார் பறப்பாங்கண்டல் கட்டுக்கரை பகுதியில் கட்டுக்கரை குளத்திற்கு முன்னாக சமூக அடிப்படையிலான மீன் வித்து உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நேற்று மாலை 4:30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வின்போது சமூக அடிப்படையிலான மீன் வித்து உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்த அமைச்சர் மீன் வளர்ப்பிற்காக மீன்குஞ்சுகளை அமைக்கப்பட்டுள்ள தடாகத்தில் வைபவரீதியாக விட்டார்.
சுமார் (300000) மூன்று இலட்சம் மீன்குஞ்சுகள் குறித்த மீன் வளர்ப்பு நீர் தடாகத்தில் விடப்பட்டுள்ளது.
இதன்பின் பயனாளிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் மரக்கன்று ஒன்றை தடாக வளாகத்தில் நாட்டியதுடன் அதன்பின் 34 வள்ளங்களை பயனாளிகளுக்கு கையளித்து வைத்தார் அதன்பின் கட்டுக்கரை குளத்திற்கு சென்று அங்கு (90000) தொன்நூறாயிரம் மீன்குஞ்சுகளை குளத்தில் விட்டார்.
இதற்கென 10 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது
குறிப்பாக இத்திட்டத்திற்கு அமைவாக பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட 9 பெண்களும் 6 ஆண்களும் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த 15 பேரும் இன்திட்டதில் இணைக்கப்பட்டு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நெக்டா நிறுவனத்தின் தேசிய நீர்வள உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜெயந்த ,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்டான்லி டி மெல் , பிராந்திய நீர்வள அபிவிருத்தி அதிகாரி நிருபராஜ், மடு பிரதேச செயலாளர் சத்தியசோதி, நீர்பாசன நிறுவனத்தின் பொறியியலாளர், நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் புஸ்பலதா ,மாவட்ட கடற்றொழில் பிரதிப்பணிப்பாளர் மிராண்டா, கிராமிய மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் ,அரச உயர் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

Reviewed by Author
on
March 08, 2014
Rating:

No comments:
Post a Comment