பழக்கூடையில் குண்டு; பாகிஸ்தானில் 20 பேர் வரையில் பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் சந்தை ஒன்றில் இடபெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 100 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
குண்டு ஒரு பழக்கூடையில் மறைத்து வைக்கப்படிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 வருடங்களில் இஸ்லாமாபாத்தில் நடந்த மிகவும் கோரமான தாக்குதல் இதுவாகும்.
அரசாங்கத்துடன் தற்போது மோதல் நிறுத்த உடன்பாட்டில் இருக்கும் பாகிஸ்தானிய தலிபான்கள், தமக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்றும், பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குவது இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணானவை என்றும் கூறியுள்ளனர்.
நாட்டை ஸ்திரமிழக்கச் செய்வதற்கு பாகிஸ்தானின் எதிரிகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை இதுவென அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
பழக்கூடையில் குண்டு; பாகிஸ்தானில் 20 பேர் வரையில் பலி
Reviewed by NEWMANNAR
on
April 09, 2014
Rating:

No comments:
Post a Comment