அண்மைய செய்திகள்

recent
-

வில்­பத்து சர­ணாலய முஸ்லிம்கள் குடி­யேற்றம்:வெளியேறுமாறு உத்தரவு

வில்பத்து வன விலங்குகள் சரணாலயம் மற்றும் வில்பத்து வனப்பாதுகாப்பு பிரதேசங்களில் அத்து மீறி குடியேறியிருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு வன வள பாதுகாப்பு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. அப்படி வெளியேறா விட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் வனவள பாதுகாப்பு பிரதேசத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து திணைக்கள அதிகாரிகள் இக்குடும்பங்கள் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்துக்கு சொந்தமான இடத்திலா அல்லது அதற்கு வெளியிலா குடியேறியுள்ளனர் என்பதைக் கண்டறிய கடந்த வாரம் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். 

அப்போது இக்குடும்பங்கள் சரணாலயத்துக்கும் வனவளப் பாதுகாப்பு பிரதேசத்திலும் குடியேறியிருப்பதாக தெரிய வந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வில்­பத்து சர­ணாலய முஸ்லிம்கள் குடி­யேற்றம்:வெளியேறுமாறு உத்தரவு Reviewed by NEWMANNAR on April 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.