O/L பரீட்சைக்கு தோற்றிய 300 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்
கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 300 மாணவர்களின் பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு பெறுபேறுகள் வெளியிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தேசிய அடையாள அட்டையை சமர்பிக்காமை, மாணவர்கள் தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர்கள் செய்த முறைப்பாடுகள் போன்றன காரணமாக இவ்வாறு பெறுபேறுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் நோக்கில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. விசாரணைகளின் பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளன.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்தப் பெறுபேறுகளை வெளியீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
O/L பரீட்சைக்கு தோற்றிய 300 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்
Reviewed by NEWMANNAR
on
April 11, 2014
Rating:

No comments:
Post a Comment