உணவு விஷமானதால் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியா, பூண்டுலோயா தோட்டப் பகுதியில் இரவு உணவு உட்கொண்ட பின்னர் திடீர் சுகவீனமுற்ற 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியிலுள்ள மத வழிபாட்டுத் தளமொன்றிலேயே நேற்றிரவு உணவு பறிமாறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதன்போது சுமார் ஆயிரத்து 500 க்கும் அதிகமானோர் இந்த உணவை உட்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உணவை உட்கொண்ட பின்னர் வயிற்று வலியால் அவதியுற்ற 50 பேர் வரை கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நிலைமை குறித்து கவலையடையத் தேவையில்லை என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
உணவு விஷமானதால் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by NEWMANNAR
on
April 14, 2014
Rating:

No comments:
Post a Comment