சித்திரைப் புத்தாண்டில் அனைத்து கைதிகளையும் பார்வையிட வாய்ப்பு
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 13 மற்றும் 14 ஆம் திகதிகளில், கைதிகளை பார்வையிடுவதற்கு அனைவருக்கும் அனுமதியளிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கைதிகளை பார்வையிடுவதற்கான விசேட தினங்களாக இந்த இரண்டு நாட்களும் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம கூறியுள்ளார்.
இந்த இரண்டு விசேட தினங்களிலும் கைதிகள் விரும்பும் எந்தவொரு உணவையும், அவர்களை பார்வையிட வருபவர்கள் வழங்க முடியும் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சாதாரணமாக கைதிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பு மாதத்திற்கு ஒரு தடவை மாத்திரமே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சித்திரைப் புத்தாண்டில் அனைத்து கைதிகளையும் பார்வையிட வாய்ப்பு
Reviewed by NEWMANNAR
on
April 09, 2014
Rating:

No comments:
Post a Comment