மன்னார் நகர முதல்வர் வெற்றிக்கிண்ணத்தை வென்றது மன்னார் வலயக்கல்விப்பணிமனை அணி
மன்னார் நகர சபை உத்தியோகஸ்தர் நலன்புரிசசங்கம் ஏற்பாடு செய்திருந்த 2014 ஆம் ஆண்டிற்காண நகர முதல்வர் வெற்றிக்கிண்ணத்திற்கான அரச, அரச சார்பற்ற திணைக்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் நேற்று புதன் கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
கடந்த இரு வாரங்களாக குறித்த போட்டி இடம் பெற்று வந்தது. இறுதியாக நேற்றைய தினம் (2) இடம் பெற்ற இறுதிச் சுற்றிற்கு மன்னார் வலயக்கல்விப்பணிமனை அணியும், மன்னார் பிரதேச செயலக அணியும் தகுதி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மன்னார் வலயக்கல்விப்பணிமனை அணி முதல் களத் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர்.
-இதன் போது மன்னார் பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மன்னார் வலயக்கல்வி பணிமனை அணி 9.3 ஓவர்களில் 4 விக்கட்டுக்ககளை இழந்து 74ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இதில் அணித்தலைவர் எம்.சி றம்சீன் 32 ஓட்டங்களை பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்களை மன்னார் நகர சபைத்தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் வழங்கி வைத்தார். இதன் போது நகர சபை உறுப்பினர்கள்,உப தலைவர்,நகர சபை செயலாளர்,நகர சபை பணியாளர்கள் என அனைவரும் பலந்து கொண்டிருந்தமை குறிப்பிபடத்தக்கது.
மன்னார் நகர முதல்வர் வெற்றிக்கிண்ணத்தை வென்றது மன்னார் வலயக்கல்விப்பணிமனை அணி
Reviewed by NEWMANNAR
on
April 03, 2014
Rating:

No comments:
Post a Comment