அண்மைய செய்திகள்

recent
-

இன்று யாழ் இந்துவில் வெள்ளை மாளிகையின் உயர்விருதைப் பெற்ற விஞ்ஞானி சிவானந்தனின் சிறப்புரை

யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம், உதயன் குழுமத்தின் ஆதரவுடன் சாதனையாளர் சிறப்புரை நிகழ்வு பி.ப 3 மணிக்கு யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

 இந்த நிகழ்வில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான ‘மாற்றத்துக்கான சாதனையாளன்” (Champion of Change) விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்த ஈழத்து விஞ்ஞானி பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் கலந்து கொள்ளவுள்ளார். யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

இன்று யாழ் இந்துவில் வெள்ளை மாளிகையின் உயர்விருதைப் பெற்ற விஞ்ஞானி சிவானந்தனின் சிறப்புரை Reviewed by NEWMANNAR on April 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.