மன்னாரில் மாபெரும் கண்காட்சியும் மலிவு விற்பனையும்
வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கண்காட்சியும் மலிவு விற்பனையும் மன்னார் வாராந்தச் சந்தை கட்டிடத்தொகுதியில் வியாழக்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையிலும் மன்னார் உதவி பிரதேச செயலாளர் வி.பவாகரன் மற்றும் மன்னார் பிரதேச செயலக பணியாளர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த மலிவு விற்பனையும் கண்காட்சியும் வெள்ளிக்கிழமை (11) வரை நடைபெறுமென ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
மரக்கறி வகைகள், உணவு வகைகள், அலங்காரப் பொருட்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மலிவு விற்பனையும் இடம்பெறுகின்றது.
மன்னாரில் மாபெரும் கண்காட்சியும் மலிவு விற்பனையும்
Reviewed by NEWMANNAR
on
April 10, 2014
Rating:

No comments:
Post a Comment