காணாமல் போன மலேஷிய விமானம்; விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து தொடர்சியாக சமிக்ஞை
காணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலியக் கப்பலொன்றுக்கு விமானத்தின் கறுப்பு பெட்டிகளில் இருந்து சமிக்ஞை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பாதுகாப்பு கப்பலான ஒசன் சீல்ட் என்ற கப்பலுக்கே இவ்வாறு சமிக்ஞை கிடைத்துள்ளதாக அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது.
விமானத்தை தேடும் பணிகளில் இது முக்கிய ஓர் விடயம் என அந்தப் பணிகளுக்கு தலைமை வகிக்கும் அவுஸ்திரேலிய விமானப் படையின் சிரேஷ்ட அதிகாரி மார்ஷல் அன்க்யூஸ் ஹூஸ்டன் கூறியுள்ளார்.
எனினும் மேலதிக தகவல்கள் அவசியமாக உள்ளதாகவும், இதுவரை விமானத்தை கண்டறிய முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடலுக்கு அடியில் 4 ஆயிரத்து 500 மீற்றர் ஆழத்தில் இருந்து இந்த சமிக்ஞை கிடைத்துள்ளதாக அன்க்யூஸ் ஹுஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன விமானத்தின் கறுப்பு பெட்டி செயலிழப்பதற்கு முன்னர் அதனை கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமது கப்பலொன்றுக்கு சமிக்ஞை கிடைத்துள்ளதாக அண்மையில் சீனா கூறியிருந்தமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன மலேஷிய விமானம்; விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து தொடர்சியாக சமிக்ஞை
Reviewed by NEWMANNAR
on
April 07, 2014
Rating:

No comments:
Post a Comment