பண்டிகை காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க 25 குழுக்கள் சுற்றிவளைப்பு.
பண்டிகை காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறும் வர்த்தகர்களை கண்டுபிடிப்பதற்காக 25 குழுக்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிக்கின்றது.
இந்த குழுக்கள் மாவட்ட ரீதியில் தமது சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகார சபையின் பிரதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் அசேல பண்டார கூறினார்.
பண்டிகை காலத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறுபவர்கள் தொடர்பில், முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் நுகர்வோர் விவகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகளை 0117 755 481 அல்லது 0117 755 482 அல்லது 0117 755 483தொலைபேசி இலக்கங்களின் ஊடாக முன்வைக்க முடியும் என அதிகார சபையின் பிரதேச விவகாரங்களுக்கான பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், 077 10 88 900 அல்லது 077 10 88 907 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிக்கின்றது.
கொழும்பு நிருபர்.
பண்டிகை காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க 25 குழுக்கள் சுற்றிவளைப்பு.
Reviewed by NEWMANNAR
on
April 07, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment