புத்தளம்- மன்னார் வீதியூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு
இலவங்குளம் பகுதியிலுள்ள வீதி நீரில் மூழ்கியுள்ளதால் புத்தளம்- மன்னார் வீதியூடான வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மல்வத்து ஒயாவின் நீர் மட்டம் அதிகரித்ததை அடுத்து எழுவான்குளம் பகுதியிலுள்ள வீதி நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் சாரதிகளை கேட்டுள்ளார்.
புத்தளம்- மன்னார் வீதியூடான வாகன போக்குவரத்து குறித்து அறிவதற்காக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மன்னார் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஏ.சி.எம்.ரியாஸுடன் தொடர்பினை ஏற்படுத்தினோம்.
புத்தளம்- மன்னார் வீதியூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு
Reviewed by NEWMANNAR
on
April 07, 2014
Rating:

No comments:
Post a Comment