பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய சட்டம் பரிந்துரை
நாட்டில் இடம்பெற்று வரும் பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய சட்டமொன்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவினால் இந்த புதிய உத்தேச சட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது பெண் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே, குற்றச் செயலை புரிந்தவருடன் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள முடியும் என்ற வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை விதிக்க புதிய சட்டம் வழியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளின் கட்சி உறுப்புரிமையை தற்காலிக அடிப்படையில் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய சட்டம் பரிந்துரை
Reviewed by NEWMANNAR
on
April 13, 2014
Rating:

No comments:
Post a Comment