இலங்கையில் இருந்து சென்ற விமானம் ஒன்றை இந்தோனேஷிய விமானப் படை கைப்பற்றியது.
இலங்கையில் இருந்து சென்ற விமானம் ஒன்று இந்தோனேஷிய விமானப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுவிற்ஸர்லாந்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானி ஒருவர் விமானம் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
இலங்கை வழியாக இந்தோனேஷிய வான் பரப்பில் பறந்த போது அந்நாட்டு போர் ஜெட் விமானங்களினால் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த விமானம் ஷோவக்டோ விமான தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படையினர் விமானத்தை சுற்றிவளைத்தனர்.
65 வயதான ஹெனிஸ் பேயர் என்ற இந்த விமானி கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக இந்தோனேசியா வான் பரப்பில் பறந்ததால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ யாழ் நிருபா் ]
இலங்கையில் இருந்து சென்ற விமானம் ஒன்றை இந்தோனேஷிய விமானப் படை கைப்பற்றியது.
Reviewed by NEWMANNAR
on
April 12, 2014
Rating:

No comments:
Post a Comment